எங்க ஊரு கோயம்புத்தூரு
பூமியில இது சொர்கம் பாரு
கோவைனு ஒரு செல்ல பேரு
இங்க மக்கள் தங்கம் பாரு
கொங்கு தமிழ் பேசப்பழகு
எங்க ஊரு கோயம்புத்தூரு
பூமியில இது சொர்கம் பாரு
கோவைனு ஒரு செல்ல பேரு
இங்க மக்கள் தங்கம் பாரு
கொங்கு தமிழ் பேசப்பழகு
பருத்தியும் நெல்லும் விளையும் மண்ணு
தென்னையும் பனையும் விவசாயிகள் கண்ணு
தேன் போல இனிக்கிற சிறுவாணி நீரு
மேற்கே மலை கேரள மழை
தெற்கே வருகிற ஊட்டி குளிரு
கோவில் குளங்கள் பக்தியும் பெருசு
கல்வி கூடங்கள் சுத்தியும் இருக்கு
அனைத்து மதத்தை மதிக்கிற மாண்பு
அழிக்கும் அரசியலை மிதிக்கிற தெம்பு
ரசிக்க வைக்கும் கோயம்புத்தூர் குசும்பு
மரியாதை பேச்சு இவங்களோட சிறப்பு
வசதிகள் வாய்ப்புகள்பல உண்டு
ஆன்மீகமும் அரசியலும் பலமிங்கு
ஆதரவும் அன்பும் அனைவரிடமும் இருக்கு
அதிகாரம் பண்ணினா முடிஞ்சிடும் கணக்கு
கால்நடையும் காற்றுமே
கடவுள் தந்திட்ட கொடையே
வையகமே வியக்கும் இங்கு
பயின்ற இளைஞர் படையே
மொத்தமா சொன்னா இது
தமிழ்நாட்டோட நெற்றி கண்ணு
எங்க ஊரு கோயம்புத்தூரு
பூமியில இது சொர்கம் பாரு
கோவைனு ஒரு செல்ல பேரு
இங்க மக்கள் தங்கம் பாரு
கொங்கு தமிழ் பேசப்பழகு