இனிய காலை பொழுது
இளமை தழும்பும் வயசு
இமைகள் திறக்க மறுக்கும்
இனிமையான ஓர் கனவு
இனிய காலை பொழுது
இளமை தழும்பும் வயசு
இமைகள் திறக்க மறுக்கும்
இனிமையான ஓர் கனவு
இளநீர் சுவை வழியும்
இனை பிரியாமல் இருக்கும்
இளஞ்சிவப்பு இதழ்கள்
இரவை வரவேற்கும் அழகு
இமயத்தை தாங்கிடும் நெஞ்சம்
இதயமும் அடிக்கடி கொஞ்சும்
இடையில் உடைகள் தஞ்சம்
இசைக்க கொலுசுகள் கெஞ்சும்
இனிய காலை பொழுது
இளமை தழும்பும் வயசு
இமைகள் திறக்க மறுக்கும்
இனிமையான ஓர் கனவு
இறைவன் படைப்பில் அற்புதம்
இயற்கை இவளிடம் அடைக்கலம்
இன்பங்கள் தங்கிடும் அதிசயம்
இவளுக்கு என் கவிதைகள் அர்ப்பணம்