அவளின் திவ்ய தரிசனம்
அழகும் அறிவும் சரிசமம்
அனைவரிடமும் ஒரு கரிசனம்
அன்பும் பண்பும் புது ரகம்
அவளின் திவ்ய தரிசனம்
அழகும் அறிவும் சரிசமம்
அனைவரிடமும் ஒரு கரிசனம்
அன்பும் பண்பும் புது ரகம்
பழகிடும் விதமோ புது விதம்
பார்வையும் பேச்சும் தனி சுகம்
உடையும் நடையும் அற்புதம்
உறவினும் நட்புக்கே முதலிடம்
வெகுளித்தனம் ஒரு புறம்
வேல் விழி பார்வை மறு புறம்
குழந்தைத்தனம் சில கணம்
குழம்பிட வைக்கும் பல தினம்
அவளின் திவ்ய தரிசனம்
அழகும் அறிவும் சரிசமம்
அனைவரிடமும் ஒரு கரிசனம்
அன்பும் பண்பும் புது ரகம்
வியக்க வைக்கும் ஞானம்
வேர்க்க வைக்கும் நாணம்
மயங்க வைக்கும் கானம்
மயக்கும் தரும் மது பானம்
அவளின் திவ்ய தரிசனம்
அழகும் அறிவும் சரிசமம்
அனைவரிடமும் ஒரு கரிசனம்
அன்பும் பண்பும் புது ரகம்