இருக்கும் போது
தொலைக்கின்றாய் ..
இழந்த பிறகு ஏன்
அழுகின்றாய்...
இருக்கும் போது
தொலைக்கின்றாய் ...?
இழந்த பிறகு
அழுகின்றாய்!?
சிறிதளவேனும்
சிந்தனையில்லாமல்
சேமிக்க மறந்தாய் மானிடனே...
சிறிதளவேனும்
சிந்தனையில்லாமல்
சேமிக்க மறந்தாய் மானிடனே...
இருக்கும் போது
தொலைக்கின்றாய் ..?
இழந்த பிறகு
அழுகின்றாய்..!?
உழைப்பின் கண்ணீர்
வேர்வையே என்பார்..
வெற்றியின் கண்ணீரால்
ஆனந்தம் கொள்வார்...
உழைப்பின் கண்ணீர்
வேர்வையே என்பார்...
வெற்றியின் கண்ணீரால்
ஆனந்தம் கொள்வார்...
புரிந்து நடந்தால்
குடும்பம் செழிக்கும்..
குடும்பம் செழித்தால்
வாழ்க்கை சிறக்கும் ...
வாழ்க்கை சிறக்கும்
இருக்கும் போது
தொலைக்கின்றாய் !?
இழந்த பிறகு
அழுகின்றாய்!?
அமைதி கொண்டால்
வாழ்க்கையில் இன்பம்...
ஆணவம் கொண்டால்
அடைவது துன்பம்
அமைதி கொண்டால்
வாழ்க்கையில் இன்பம்...
ஆணவம் கொண்டால்
அடைவது துன்பம்
உண்மை உணர்ந்தால்
உள்ளத்தில் இன்பம் ..
நல்லதே நடந்தால்
இல்லமே சொர்கம் ..
....இல்லமேசொர்கம்
இருக்கும் போது
தொலைக்கின்றாய் ..?
இழந்த பிறகு
அழுகின்றாய்..!?
சிறிதளவேனும்
சிந்தனையில்லாமல்
சேமிக்க மறந்தாய் மானிடனே..