இறைவன் படைத்தான் தன்னையே
அனுப்பி வைத்தான் மண்ணிலே
அன்பு மட்டும் தான் கண்ணிலே
அவன் இட்ட பெயர் தான் அன்னையே
இறைவன் படைத்தான் தன்னையே
அனுப்பி வைத்தான் மண்ணிலே
அன்பு மட்டும் தான் கண்ணிலே
அவன் இட்ட பெயர் தான் அன்னையே
பெண்ணாக பிறந்தாள்
குடும்பத்தில் வளர்ந்தாள்
கனவுகளில் வாழ்ந்தாள்
காலத்தில் மணந்தாள்
கனவுகளில் வாழ்ந்தாள்
காலத்தில் மணந்தாள்
கருவினை சுமந்தாள்
உறக்கமின்றி தவித்தாள்
உணவை தவிர்த்தாள்
தனிமையை ரசித்தாள்
உணவை தவிர்த்தாள்
தனிமையை ரசித்தாள்
இறைவன் படைத்தான் தன்னையே
அனுப்பி வைத்தான் மண்ணிலே
அன்பு மட்டும் தான் கண்ணிலே
அவன் இட்ட பெயர் தான் அன்னையே
தனக்குள்ளே பேசுகிறாள்
ஆனந்தம் கொள்கிறாள்
அன்னை என ஆனதும்
அனைத்தையும் மறந்தாள்
அன்னை என ஆனதும்
அனைத்தையும் மறந்தாள்
கற்றதும் பெற்றதும் கனவு
பெற்ற பிள்ளையே உலகு
மண்ணில் வாழும் உயிர்கள்
தாய்மை தந்திடும் நிறைவு
மண்ணில் வாழும் உயிர்கள்
தாய்மை தந்திடும் நிறைவு
இறைவன் படைத்தான் தன்னையே
அனுப்பி வைத்தான் மண்ணிலே
அன்பு மட்டும் தான் கண்ணிலே
அவன் இட்ட பெயர் தான் அன்னையே