தந்தன தத்தன தையன தத்தன…
தனன தத்தன தான தையன தந்தானா…
தந்தன தத்தன தையன தத்தன…
தனன தத்தன தான தையன தந்தானா…
அழகிய அழகிய மொழியே
அறிவேன் தமிழே உந்தன் அருமையே
மொழிகளுக்கு எல்லாம் தலையே
வணங்குவேன் தினம் உனையே
அழகிய அழகிய மொழியே
அறிவேன் தமிழே உந்தன் அருமையே
மொழிகளுக்கு எல்லாம் தலையே
வணங்குவேன் தினம் உனையே
பல்லாண்டு கால பழமையே
என்றுமே குன்றாத இளமையே
சான்றுகள் கூறும் உண்மையே
மொழிகளில் அது முதன்மையே
சொல்லிட கூடுது பெருமையே
கேட்டிட தரும் இனிமையே
பேசிட என்றும் எளிமையே
எழுதிட தோன்றும் புதுமையே
தமிழ் என்பது வாய்மையே
கற்பது நமது கடமையே
காப்பது நமது உரிமையே
தமிழுக்கு உண்டு தனித்தன்மையே
தமிழன் என்று சொல்லும்
தலை நிமிர்ந்து நிற்குமே
தன்மானமும் செந்தமிழும்
எந்தன் உயிருக்கு நிகராகுமே
எந்தன் உயிருக்கு நிகராகுமே
அழகிய அழகிய மொழியே
அறிவேன் தமிழே உந்தன் அருமையே
மொழிகளுக்கு எல்லாம் தலையே
வணங்குவேன் தினம் உனையே
தந்தன தத்தன தையன தத்தன…
தனன தத்தன தான தையன தந்தானா…