Ni-sa-ga-sa ni-sa-ga-sa ni-sa-ga-sa ni-sa-ga-sa pa
Sa-ga-ma-ga sa-ga ma-ga sa-ga ma-ga sa-ga ma-ga sa
Sa-ni-pa, ni-pa-ma, sa-ni-pa, ni-pa-ma
Sa-ni-dha-sa-ma-ga-pa-ma-ni-pa-sa-ni-ga-ni-sa
காலை பனி மூட்டம்
உதயம் இடம் மாறும்
காதல் பரிமாற்றம்
காமன் கணைகள் தாக்கும்
கண்கள் வலை வீசும்
இதழ்கள் மொழி பேசும்
கனவுகள் தடு மாறும்
நினைவுகள் தடம் மாறும்
உள்ளில் தடுமாற்றம்
உறவுகள் மெருகேற்றும்
உன் மெய் விளக்கிடும்
உண்மைகள் விளங்கிடும்
Sa-ni-pa, ni-pa-ma, sa-ni-pa, ni-pa-ma
Sa-ni-dha-sa-ma-ga-pa-ma-ni-pa-sa-ni-ga-ni-sa
இதயம் சுகங்கள் தேடும்
இரவுகள் தோறும் பரிமாறும்
இனிமை அதில் பங்கேற்கும்
இளமை தினம் அரங்கேறும்
தேடல்கள் என்று முடியும்
தேகம் தீர்வாக மாறும்
ஏக்கங்கள் விடை பெறும்
தேவைகள் என்றும் தொடரும்
காலை பனி மூட்டம்
உதயம் இடம் மாறும்
காதல் பரிமாற்றம்
காமன் கணைகள் தாக்கும்
Pa-ni-sa-ni-sa-ga-sa-ga-ma-ga-ma-pa-ma-pa-ni-pa-ni-sa-ni-sa-ga-sa
Sa-ga-ma-pa, ni-pa-ma-pa, sa-ga-ma-pa, ni-pa-ma-pa