ஆ..ஆ…ஆஅ…ஆஅ…ஆஅ….
ஆஅ….ஆஅ…ஆஅ…ஆ
ஆஅ…ஆஅ…ஆஅ…ஆ…
தன்னந்த நம் த
நம் தம் நம் த நம் தம்
நம் த நம் தம்
நம் த நம் தம்
நம் த நம் தம்
மழை இனி குளிர் இனி
இதமான வெண் பனி
மண் மணம் சுகந்தம்
மனதிற்கு சுகம் தரும்
மழை இனி குளிர் இனி
இதமான வெண் பனி
மண் மணம் சுகந்தம்
மனதிற்கு சுகம் தரும்
வண்ண மலர்களின் வாசம்
வனங்கள் தோறும் வீசும்
நிரம்பி வழியும் நீரோடை
நீந்தி மகிழ ஏது தடை
மேகங்கள் ஊர்வலம்
மேளங்கள் இடி முழக்கம்
மின்னல் காட்டும் வேடிக்கை
வானில் தினமும் வாடிக்கை
மலையிலே தென்றல் காற்று
வரப்பிலே அசைந்தாடும் நாற்று
ஜதி போடும் தென்னங்கீற்று
ஸ்ருதியோடு பறவைகள் பாட்டு
பாதி நிலவின் பிறை ஒளி
பாதி உறக்கத்தில் புவி விழி
இயற்கையின் ஆனந்தம்
இறைவன் தந்த பேரின்பம்
மழை இனி குளிர் இனி
இதமான வெண் பனி
மண் மணம் சுகந்தம்
மனதிற்கு தினம் சுகம் தரும்
நம் தம் த நம் தம்
நம் தம் த நம் தம்
நம் தம் த நம் தம்
நம் தம் த நம் தம்