பொன் அந்தி மாலை
மனதிலே இன்ப லீலை
மயில் தோகை மேனி
கொல்லும் கணையாழி
பொன் அந்தி மாலை-
மனதிலே இன்ப லீலை
மயில் தோகை மேனி
கொல்லும் கணையாழி
மலைக்கன்னி பூவுடை அணிய..
பனியால் முழுவதும் நனைய..
செழுமை வெளியில் தெரிய
மடிதனில் மயங்கிட இடம் கொடுக்க
கருங்கூந்தல் வெண்ணிற தேகத்தில் மறை பந்தலாக
கன்னி தேனை உண்ண
கண்ஜாடை காட்டினாள் மறைமுகமாக
பொன் அந்தி மாலை-
மனதிலே இன்ப லீலை
மயில் தோகை மேனி
கொல்லும் கணையாழி
ஆடை மூடிய பாதி நிலவு
ஆசையோடு பார்க்கும் உலகு
விழியோ போதையில் திண்டாட வெட்கத்தில் விரல்கள் கொண்டாட
உணர்வுகள் என்ற வீணை
இசைத்திடும் இன்ப நாதம்
கேட்கின்ற மேனியில்
தோன்றிடும் புதிய சொர்கம்
பொன் அந்தி மாலை-
மனதிலே இன்ப லீலை
மயில் தோகை மேனி
கொல்லும் கணையாழி
விடிகாலை விழிகள்
விழித்திடும் வேளை
பூக்களும் மலரும் மேதினியில்
பால் மழை பெய்திடும் மேனியில்
மெல்ல விடியட்டும் இரவு
சொல்லி மயக்கிடும் இளமை
எந்நாளும் உன்னோடு நான்
ஒன்றாகி கலக்கும் உறவல்லவோ
பொன் அந்தி மாலை-
மனதிலே இன்ப லீலை
மயில் தோகை மேனி
கொல்லும் கணையாழி