காற்றில் பறக்கும் நினைவுகள்
காதில் விழுகின்ற சொற்கள்
மனது தேடிடும் பொருள்கள்
இதயம் மாற்றிடும் வரிகள்
காற்றில் பறக்கும் நினைவுகள்
காதில் விழுகின்ற சொற்கள்
மனது தேடிடும் பொருள்கள்
இதயம் மாற்றிடும் வரிகள்
கனவுகள் எழுதும் கவிதைகள்
கற்பனையில் தோன்றும் புதுமைகள்
நிஜங்கள் ஆகிடும் நிழல்கள்
காட்சிகள் காட்டும் உண்மைகள்
விரல்கள் கோர்க்கும் ஒலிகள்
செவிகள் கேட்கும் ஓசைகள்
இதழ்கள் பாடும் பாடல்கள்
இசைக்கு எதற்கு பாஷைகள்
காற்றில் பறக்கும் நினைவுகள்
காதில் விழுகின்ற சொற்கள்
மனது தேடிடும் பொருள்கள்
இதயம் மாற்றிடும் வரிகள்
கவிதைகள் எழுதிட கவிஞன்
இசைகள் சேர்த்திட கலைஞன்
நவரசத்தை காட்டிடும் நடிகன்
ரசனைகளை ரசித்திடும் ரசிகன்
இனிமை தரும் ராகங்கள்
தனிமை விரும்பும் ஸ்வரங்கள்
மறந்திடும் மனதில் ரணங்கள்
இறைவன் தந்த வரங்கள்
இறைவன் தந்த வரங்கள்
காற்றில் பறக்கும் நினைவுகள்
காதில் விழுகின்ற சொற்கள்
மனது தேடிடும் பொருள்கள்
இதயம் மாற்றிடும் வரிகள்