கஜமுகனே கஜானானே சரணம்
கருணையுடன் அருள் புரிந்திடுவாய் கணேசனே!
கஜமுகனே கஜானானே சரணம்
கருணையுடன் அருள் புரிந்திடுவாய் கணேசனே
களிமண் குழைத்தெடுத்து கையில் பிடித்தே
கடவுள் உரு உன்னை கண்டு பிடித்தோம்..
கஜமுகனே கஜானானே சரணம்
கருணையுடன் அருள் புரிந்திடுவாய் கணேசனே
கொழுக்கட்டை உடன் எருக்கம் பூ மாலை
கனத்த அடிவயிற்றில் துளசி அரைஞாண்!
காத்திருக்கும் மூஞ்சுறுக்கு வடையுடனும்
கதிரவன் வரும் முன்பே படையலிட்டோம்..
கஜமுகனே கஜானானே சரணம்
கருணையுடன் அருள் புரிந்திடுவாய் கணேசனே
கல்வி கேள்வி தொழில் படைப்புகளும் உனை
கை தொழுது தொடங்கிட சிறந்திடுமே!
கல்வி கேள்வி தொழில் படைப்புகளும் உனை
கை தொழுது தொடங்கிட சிறந்திடுமே!
கன்னிப்பெண்கள் உன்னை வலம் வரவே
கைப்பற்றிட நல்ல துணை கூடுமே!
கஜமுகனே கஜானானே சரணம்
கருணையுடன் அருள் புரிந்திடுவாய் கணேசனே
கலகம் வினைகள் எல்லாம் விலகிடுமே
கணபதி உன்னை தொழுதவுடன்!
குழந்தை செல்வங்களும் குறைகள் எல்லாம் உன்னை
கும்பிட காரியங்கள் கை கூடிடுமே!
கஜமுகனே கஜானானே சரணம்
கருணையுடன் அருள் புரிந்திடுவாய் கணேசனே