அன்பே அன்பே என் அன்பே-- நீ
கோபம் கோபம் கொள்ளாதே
என்ன என்ன தவறு
செய்தேன் நான் ...
உந்தன் அழகில் என்னை
அறியாமலே வீழ்ந்தேன் நான்
அன்பே அன்பே என் அன்பே
கோபம் கோபம் கொள்ளாதே
என்ன என்ன தவறு
செய்தேன் நான் ...
உந்தன் அழகில் என்னை
அறியாமலே வீழ்ந்தேன் நான்
உன்னில் என்னை
கண்டேன் நான்
உள்ளில் மகிழ்ச்சி
கொண்டேன் நான்
என்ன என்ன பெண்ணே
உந்தன் நோக்கம்
உன் கோபம் இதயத்தை
விட்டு விட்டு தாக்கும்
விண்வெளி நிலவை வெறுக்குமா
இடைவெளி நம் காதலை பிரிக்குமா
தனிமை நினைவை இழக்குமா
தவணை முறையில் என்னை
நினைக்குமா
அன்பே அன்பே என் அன்பே
கோபம் கோபம் கொள்ளாதே
என்ன என்ன தவறு
செய்தேன் நான் ...
உந்தன் அழகில் என்னை அறியாமலே வீழ்ந்தேன் நான்
இரவின் மடியில் மயங்கினேன்
இரவு முழுதும் நீ என் கனவிலே
பகலின் மடியில் விழித்தேன்- உன்
அழகின் பிடியில் விழுந்திட்டேன்
விழிச்சுடரில் குளிர் காய்ந்தேன்
இதழ் மொழியில் நான் சாய்ந்தேன்
கோடை நிழலும் நீ தான் கண்ணே
இருளில் வெளிச்சமும் நீ தான் என் அன்பே
அன்பே அன்பே என் அன்பே
கோபம் கோபம் கொள்ளாதே
என்ன என்ன தவறு
செய்தேன் நான் ...
உந்தன் அழகில் என்னை
அறியாமலே வீழ்ந்தேன் நான்
போவோம் போவோம்
பள்ளிக்கூடமே - தினம்
படிப்போம் படிப்போம்
புதுப்பாடமே
விழியோடு விழிகள்
பார்த்து ரசிப்போம்
காதோடு காதோரம் பல
கதைகள் பேசி மகிழ்வோம்
அன்பே அன்பே என் அன்பே
கோபம் கோபம் கொள்ளாதே
என்ன என்ன தவறு
செய்தேன் நான் ...
உந்தன் அழகில் என்னை
அறியாமலே வீழ்ந்தேன் நான்