இதயத்தில் உறங்கிடும் விழிகள்!
இதழ்கள் கூறிடும் மொழிகள்!
காதல் போதிக்கும் சாஸ்திரம் -
காமம் சாதிக்கும் சரித்திரம்!
இதயத்தில் உறங்கிடும் விழிகள்!
இதழ்கள் கூறிடும் மொழிகள்!
காதல் போதிக்கும் சாஸ்திரம் -
காமம் சாதிக்கும் சரித்திரம்
காதலில் இன்பம் தனி சுகம்! -
கனவுகள் தொடரும் பல யுகம்!
கண்களில் தெரியும் கலவரம்;
கைகள் தொடவே அற்புதம்.!!
இரவுகள் தேடிடும் உணர்வுகள்!
இளமையை வென்றிட உறவுகள்!
இனிமையை கண்டிட ஊடல்கள்!
தனிமையை கொன்றிட கூடல்கள்!
கடவுள் படைத்திட்ட தேகம் - அதில்
சாத்தான் நுழைத்திட்ட காமம்!
தேகத்தில் தேடல்கள் அதிசயம்!
காமத்திற்கு தீர்வுகள் அவசியம்!
இதயத்தில் உறங்கிடும் விழிகள்!
இதழ்கள் கூறிடும் மொழிகள்!
காதல் போதிக்கும் சாஸ்திரம் -
காமம் சாதிக்கும் சரித்திரம்