காதல் கைகூடும் வேளை
கழுத்தில் விழுந்திடும் மாலை
கனவுகள் நிறைந்திடும் மாலை
இரவுகளில் தொடர்ந்திடும் இன்ப லீலை
காதல் கைகூடும் வேளை
கழுத்தில் விழுந்திடும் மாலை
கனவுகள் நிறைந்திடும் மாலை
இரவுகளில் தொடரும் இன்ப லீலை
இரு ஜோடி விழிகள்
ஒரு பார்வை
இரு ஜோடி இதழ்கள்
ஒரு வார்த்தை
இரு ஜோடி கால்கள்
ஒரு பயணம்
இருவரும் சேர்ந்திட
அது தொடரும்
இல்லறம் என்பது
இருவரும் வளர்த்திடும்
இனிய யாகம்.
இருவருக்கும்
வாழ்க்கையின்
இரண்டாம் பாகம்.
காதல் கைகூடும் வேளை
கழுத்தில் விழுந்திடும் மாலை
கனவுகள் நிறைந்திடும் மாலை
இரவுகளில் தொடரும் இன்ப லீலை
வாழ்த்த வந்த சில சுற்றங்கள்
வாழ வைத்த பல நட்புகள்
அன்பு மாறா அனைத்து சொந்தங்கள்
அழிக்க முடியா
அசையா சொத்துக்கள்
இருமனம் இணைகின்ற திருமணம்
இதயங்கள் இடம் மாறும்
ஒரு கணம்
இளமை கனவுகள்
தினம் தினம்
இறைவன் தந்திட்ட
ஓர் வரம்
இறைவன் தந்திட்ட
ஓர் வரம்
காதல் கைகூடும் வேளை
கழுத்தில் விழுந்திடும் மாலை
கனவுகள் நிறைந்திடும் மாலை
இரவுகளில் தொடர்ந்திடும் இன்ப லீலை