இருண்ட வானத்தில்
ஒளியூட்டுது அந்த நிலவு..
அந்த நிலவு
இருளான மனதினில்
விளக்கேற்றிடும் அவளின் நினைவு
அவளின் நினைவு
இருண்ட வானத்தில்
ஒளியூட்டுது அந்த நிலவு..
அந்த நிலவு
இருளான மனதினில்
விளக்கேற்றிடும் அவளின் நினைவு
அவளின் நினைவு
விடியலில் மலர்ந்த ஒரு அரும்பு
விதிகளை மாற்ற வந்த மருந்து
விரகத்தை தீர்க்க வந்த விருந்து
வாழ்க்கையை வாழ்ந்து விடு எல்லாம் மறந்து
எல்லாம் மறந்து
ஏக்கம் தணித்திடும் இளமை
ஏங்க வைத்திடும் வளமை
ஆசைகளை தடுத்திடும் நேர்மை
ஆனந்தம் அடைந்திடும் தாய்மை
அடைந்திடும் தாய்மை
இருண்ட வானத்தில்
ஒளியூட்டுது அந்த நிலவு..
அந்த நிலவு
இருளான மனதினில்
விளக்கேற்றிடும் அவளின் நினைவு
அவளின் நினைவு
ஆயுளை குறைக்கும் தனிமை
ஆடம்பரம் தந்திடும் ஏழ்மை
அனுபவங்கள் கொடுக்கும் திறமை
எளிமை வாழ்வில் இனிமை
வாழ்வில் இனிமை
இன்பம் என்றுமே ஒருமை
துன்பங்கள் என்பது பன்மை
உறவுகள் வாழ்க்கையின் உரிமை
உணர்வுகள் மாற்றும் வெறுமை
மாற்றும் வெறுமை
காதலில் வேண்டும் பொறுமை
காத்திருப்பு மிகவும் கொடுமை
காவியங்கள் சொல்லிடும் உண்மை
காலத்தில் முடிப்பது நம் கடமை
முடிப்பது நம் கடமை
இருண்ட வானத்தில்
ஒளியூட்டுது அந்த நிலவு..
அந்த நிலவு
இருளான மனதினில்
விளக்கேற்றிடும் அவளின் நினைவு
அவளின் நினைவு