காதல் அவளுக்கு வேடிக்கை
ஊடல் அவளின் வாடிக்கை
நேசங்கள் வெறும் கேளிக்கை
நேரங்கள் தருகின்ற காணிக்கை
காதல் அவளுக்கு வேடிக்கை
ஊடல் அவளின் வாடிக்கை
நேசங்கள் வெறும் கேளிக்கை
நேரங்கள் தருகின்ற காணிக்கை
கோபங்கள் அவளது தாயகம்
கஷ்டங்களே எனது ஜாதகம்
தொடர்ந்திடும் நட்புக்கு பாதகம்
முடிவுகள் மாறிடும் தினம் தினம்
விழிகள் சொல்லிடும் விடுகதை
முகங்கள் எழுதிடும் முகவுரை
இதயங்கள் முடிக்கின்ற முடிவுரை
பிரிவுகள் மட்டுமே தொடர்கதை
இனிமை நினைவுகள் அற்புதம்
இளமைக்கு தேகம் அர்ப்பணம்
இதழ்களில் பொய்களின் அடைக்கலம்
இவளுக்கு அனைத்துமே சமர்ப்பணம்
காதல் அவளுக்கு வேடிக்கை
ஊடல் அவளின் வாடிக்கை
நேசங்கள் வெறும் கேளிக்கை
நேரங்கள் தருகின்ற காணிக்கை