வாழ்க்கையே நூலகம்
காதல் ஒரு புத்தகம்
விழிகள் தான் முதல் வரி
இதயத்தின் முகவரி
வாழ்க்கையே நூலகம்
காதல் ஒரு புத்தகம்
விழிகள் தான் முதல் வரி
இதயத்தின் முகவரி
இதழ்கள் சொல்லும் சம்மதம்
இருவர் மதமும் சரிசமம்
உலகம் காணும் சமத்துவம்
உள்ளம் பெறுகின்ற தனித்துவம்
காதல் சொல்லும் சங்கதி
கடவுள் வாழும் சந்நிதி
வாழ்க்கை தரும் வெகுமதி
இருவர் சேர்ந்திட நிம்மதி
வாழ்க்கையே நூலகம்
காதல் ஒரு புத்தகம்
விழிகள் தான் முதல் வரி
இதயத்தின் முகவரி
விதிகள் எழுதும் நாடகம்
விளங்கிடாத ஜாதகம்
ஜெயம் என்றால் சாதகம்
பயம் வந்தால் பாதகம்
மனம் தேடும் மருத்துவம்
தினம் கூறும் ஒரு தத்துவம்
போதை தான் மருந்தகம்
மறந்து போகும் மகத்துவம்
மறைந்து போகும் மகத்துவம்
வாழ்க்கையே நூலகம்
காதல் ஒரு புத்தகம்
விழிகள் தான் முதல் வரி
இதயத்தின் முகவரி