மாயமான ஒரு வாழ்வு
மர்மமான இந்த உலகு
கனவுகளில் நிறைந்த தேகம்
காயமானது உள்ளே மனது
மாயமான ஒரு வாழ்வு
மர்மமான இந்த உலகு
கனவுகளில் நிறைந்த தேகம்
காயமானது உள்ளே மனது
காணல் நீராக காலங்கள்
கடவுள் படைத்த கோலங்கள்
காட்சிகளில் பல வேஷங்கள்
கடைசி வரை கிடைக்காத மோட்சங்கள்
உச்சியில் இருந்தால் வரவுகள்
சுற்றியே வருகின்ற உறவுகள்
நிலமை இறங்கிட வரும் பிரிவுகள்
நினைவுகளில் அகலாத பிறவிகள்
மாயமான ஒரு வாழ்வு
மர்மமான இந்த உலகு
கனவுகளில் நிறைந்த தேகம்
காயமானது உள்ளே மனது
பாதை மாறிய பயணங்கள்
பாதியில் முடியும் தருணங்கள்
படிக்க முடியா நம் விதி
படைத்தவன் எழுதிய தலைவிதி
தேடி தேடி அலைந்தோம்
இருந்ததை நாம் மறந்தோம்
மெய் என்ற மேனியை ஒரு நாள்
பொய் என்று அறிவோம்
மாயமான ஒரு வாழ்வு
மர்மமான இந்த உலகு
கனவுகளில் நிறைந்த தேகம்
காயமானது உள்ளே மனது