ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
வெண்ணிலவு உறங்குது
வானிலே அமைதி தவழுது
மேகங்கள் இறுகத்தழுவுது
விண்மீன்கள் உருகத்தொடங்குது
வெண்ணிலவு உறங்குது
வானிலே அமைதி தவழுது
மேகங்கள் இறுகத்தழுவுது
விண்மீன்கள் உருகத்தொடங்குது
காற்று மௌனத்தை பரிமாறுது
நீரூற்று மேலெழும்பி கிளம்புது
வெண்பனி சுடராக எரியுது
கதிரவன் தன் பணி தவறுது
சாலைகள் பஞ்சிலே ஆனது
சோலையில் இரும்புகள் பூக்குது
கரும்புகள் நூலை வார்க்குது
எறும்புகள் வலைகள் பின்னுது
வெண்ணிலவு உறங்குது
வானிலே அமைதி தவழுது
மேகங்கள் இறுகத்தழுவுது
விண்மீன்கள் உருகத்தொடங்குது
ஆற்றிலே வைரங்கள் நீந்துது
சேற்றிலே முத்துக்கள் முளைக்குது
நாற்றுகள் பூபாளம் பாடுது
பறவைகள் நம் மொழி பேசுது
இரவிலே வர்ணங்கள் தெரியுது
கனவிலே வண்ணங்கள் மின்னுது
நிழல்களில் உருவங்கள் மறையுது
கவிதையில் வரிகள் இடம் பெயருது
கவிதையில் வரிகள் இடம் பெயருது
வெண்ணிலவு உறங்குது
வானிலே அமைதி தவழுது
மேகங்கள் இறுகத்தழுவுது
விண்மீன்கள் உருகத்தொடங்குது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ