விஸ்வம் விஸ்வம்
விஸ்வேஸ்வரா !
ஜெகம் நீ ஜெகம் நீ
ஜெகதீஸ்வரா !
விஸ்வம் விஸ்வம்
விஸ்வேஸ்வரா !
ஜெகம் நீ ஜெகம் நீ
ஜெகதீஸ்வரா !
திருப்பாதங்கள் வணங்கி
நின்றோம் பட்டீஸ்வரா !
பாவங்களை போக்கிடுவாய்
பரமேஸ்வரா !
சன்னதியை சரணடைந்தோம்
சங்கமேஸ்வரா!
சங்கடங்கள் தீர்த்திடுவாய்
சர்வேஸ்வரா !
விஸ்வம் விஸ்வம்
விஸ்வேஸ்வரா !
ஜெகம் நீ ஜெகம் நீ
ஜெகதீஸ்வரா !
கருணையை
வேண்டுகிறோம்
கபாலீஸ்வரா!
காத்தருள்வாய் பொறுத்தருள்வாய் சவுந்தேஸ்வரா!
தேக நலம் வேண்டி
வந்தோம் அக்னீஸ்வரா!
ஊழ்வினையை அகற்றிடுவாய்
சுகனேஸ்வரா!
விஸ்வம் விஸ்வம்
விஸ்வேஸ்வரா !
ஜெகம் நீ ஜெகம் நீ
ஜெகதீஸ்வரா !
குலம் வாழ கோவில்
வந்தோம் சோமேஸ்வரா!
குறைகளை நீக்கிடுவாய்
கோடீஸ்வரா!
அனைத்துலகு ஆட்சி
செய்யும் ஆட்சீஸ்வரா!
ஆண்மை பெண்மை
காத்திடுவாய் அர்த்தநாரீஸ்வரா!
விஸ்வம் விஸ்வம்
விஸ்வேஸ்வரா !
ஜெகம் நீ ஜெகம் நீ
ஜெகதீஸ்வரா !
ஒருநாளும் உனை மறவாத
வரம் ஒன்று தா
எந்நாளும் அழைத்தாலும்
நீ வர வேண்டும் வா
எனக்கு மட்டும் கேட்கும்
உந்தன் சதங்கை ஒலி
எந்தன் கண்ணில் தெரியுது
உன் விழியின் ஒளி
நான் போகும் பாதையில்
நல்வழி காட்ட வா
என் வருங்கால வாழ்க்கைக்கு
ஒளி ஏற்ற வா
விஸ்வம் விஸ்வம்
விஸ்வேஸ்வரா !
ஜெகம் நீ ஜெகம் நீ
ஜெகதீஸ்வரா !