உன்னுடன் புலனத்தில் பேசியே வார்த்தை தீர்ந்தது
தினம் உண்ணுடன் நடந்தே கால்கள் தேய்ந்தது
என் இதயத்தின் முழு அளவை எட்டியவள் நீ
இரத்ததில் கலந்து என்னுள் நுழைந்தவள் நீ
என்னை காதலிக்க உன் போல் ஆளில்லை
என்றும் உன்னை நினைக்காத நாளில்லை
கீச்சகமும் கீச்சலிடும் உன் அழகை
இருந்தும் பாசத்திற்க்கு நீ செய்வாய் தொழுகை
என்னை மட்டுமே கண்கானிக்கும் மறைகாணி நீ
உன்னையும் கொஞ்சம் கவனித்து கொள் என் தாரணி
எனக்கு மின்சாரம் ஊட்டும் மின்னூக்கியே
நான் மீண்டும் மீண்டும் இறப்பேன் உன் கண்தாக்கியே