லா ல ல லாலா
லலல லா ல லா
லா ல ல லாலா
லலல லா ல லா
தென்றல் உன் முகவரி
தேடி தேடி அலையுது
முந்தியே ஓடி வந்து உன்
முந்தியை தழுவுது
தெம்மாங்கு பாட்டு
தாளம் மறந்து நிற்குது
பூபாளம் தன்னை இழந்து
உன் அழகை பாடுது
வழியில் தெரியும் காட்சியில்
விழிகள் இமைக்க மறக்குது
இதயம் இடம் மாறி
இமயத்தின் மேலே பறக்குது
தென்றல் உன் முகவரி
தேடி தேடி அலையுது
முந்தியே ஓடி வந்து உன்
முந்தியை தழுவுது
சாரல் மழை உன் மேனியில்
மெய் அபிஷேகம் நடத்துது
நனைந்த அங்கங்களில்
ஜவ்வாது மணம் பரவுது
உறக்கத்தில் உன் நினைவுகள்
ரீங்காரம் இசைக்குது
அதிகாலையில் உன் பெயர்
சுப்ரபாதமாக ஒலிக்குது
தினம் சுப்ரபாதமாக ஒலிக்குது
லா ல ல லாலா
லலல லா ல லா
தென்றல் உன் முகவரி
தேடி தேடி அலையுது
முந்தியே ஓடி வந்து உன்
முந்தியை தழுவுது
அழகிலே அபூர்வ அமிர்தம் நீ
அன்பிலே உருகிடும் அதிசயம் நீ
அகிலம் வியக்கும் ஆச்சரியம் நீ
ஆண்டவன் படைப்பிலே அற்புதம்
நீ
ஆண்டவன் படைப்பிலே அற்புதம் நீ....