ஹும்-ஹு-ஹும்
ஹும்-ஹு-ஹும்
ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
தோல்வி என்பது வாழ்வில்
வெற்றியின் முதல் படிக்கட்டு
தோல்வி என்பது வாழ்வில்
வெற்றியின் முதல் படிக்கட்டு
நாளை வெல்வோம் என்ற
நம்பிக்கையில் நடை கட்டு
நாளை வெல்வோம் என்ற
நம்பிக்கையில் நடை கட்டு
தோல்வி என்பது வாழ்வில்
வெற்றியின் முதல் படிக்கட்டு
நாளை வெல்வோம் என்ற
நம்பிக்கையில் நடை கட்டு
உழைப்பும் உயர்வும் இருந்தால்
உலகம் உன் முன்னால் கை கட்டுமே
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என
அனைவரின் கை தட்டுமே
கற்றதை மற்றவர்க்கு அளித்தால்
பெற்றவை மேலும் பெருகுமே
உண்மையுடன் நீயும் இருந்தால்
நன்மையும் நல்லதே நடக்குமே
தோல்வி என்பது வாழ்வில்
வெற்றியின் முதல் படிக்கட்டு
நாளை வெல்வோம் என்ற
நம்பிக்கையில் நடை கட்டு
நேர்மை என்பது என்றும்
ஒரு வித போதை மாத்திரை
தொடர்ந்து நடந்தால் வாழ்வில்
தொடரும் இன்ப யாத்திரை
அன்பு அமைதி இருந்தால்
இரவில் சுகமான நித்திரை
ஆணவம் தலைக்கனம் வந்தால்
என்றுமே மூடாது விழித்திரை
தோல்வி என்பது வாழ்வில்
வெற்றியின் முதல் படிக்கட்டு
நாளை வெல்வோம் என்ற
நம்பிக்கையில் நடை கட்டு
பிறக்கின்ற போது மனது
கறை படியாத வெண்திரை
வாழ்ந்த முறையை கூறிடும்
மனிதனின் இறுதி யாத்திரை
ஆசையும் பேராசையும் கொல்லும்
மனதில் இருக்கின்ற வரையிலே
பேரும் புகழும் செல்வங்கள் யாவும்
மண்ணில் செல்கின்ற வரையிலே
தோல்வி என்பது வாழ்வில்
வெற்றியின் முதல் படிக்கட்டு
நாளை வெல்வோம் என்ற
நம்பிக்கையில் நடை கட்டு
ஹும்-ஹு-ஹும்
ஆஆ ஆஹா ஆஆ
நாளை வெல்வோம் என்ற
நம்பிக்கையில் நடை கட்டு
ஆஆ ஆஹா ஆஆ
நம்பிக்கையில் நடை கட்டு
ஹும்-ஹு-ஹும்