

Prompt / Lyrics
ஆ..ஆ…ஆஅ…ஆஅ…ஆஅ…. ஆஅ….ஆஅ…ஆஅ…ஆ ஆஅ…ஆஅ…ஆஅ…ஆ… கடற்கரை காற்றும் கன்னி அவள் நடையும் கண்ணில் தெரியும் அழகினை காண மனது தவித்திடும் கடற்கரை காற்றும் கன்னி அவள் நடையும் கண்ணில் தெரியும் அழகினை காண மனது தவித்திடும் திசை அறியாமல் கதிரும் நேரம் தெரியாமல் நிலவும் வீச மறந்த தென்றலும் - அவள் விழிகளை காண விரைந்திடும் நட்சத்திர கூட்டம் சிதறிடும் நாட்காட்டி நகர மறந்திடும் கரை மறந்து அலைகளும் -அவளை தேடி தினமும் அலைந்திடும் சோலையில் நிறைந்த மரங்களும் வரப்பில் வளரும் பயிர்களும் வனத்தில் வாழும் உயிர்களும் நிலை குலைந்து நின்றிடும் கடற்கரை காற்றும் கன்னி அவள் நடையும் கண்ணில் தெரியும் அழகினை காண மனது தவித்திடும் அலைகின்ற வெண் முகில்களும் சிலையாகும் கல் மலைகளும் வலை போட்டு தேடிடும் -- அவள் வரவை தினம் நாடிடும் அழகில் அவள் சிகரம் அமுதம் சிதறும் பருவம் அகத்தில் மறையா உருவம் அடிமையானது எனது இதயம் அகத்தில் மறையா உருவம் அடிமையானது எனது இதயம் கடற்கரை காற்றும் கன்னி அவள் நடையும் கண்ணில் தெரியும் அழகினை காண மனது தவித்திடும் கண்ணில் தெரியும் அழகினை காண மனது தினமும் தவித்திடும் ஆ..ஆ…ஆஅ…ஆஅ…ஆஅ…. மனது தினமும் தவித்திடும் ஆஅ…ஆஅ…ஆஅ…ஆ… தினமும் தவித்திடும்
Tags
indian male solo, fast beat, romantic melody, blues
3:32
No
1/17/2026