காதல் போதையில்
திண்டாடுது உள்ளம்
காம பார்வையால்
தள்ளாடுது தேகம்
போதை தீரவே
பேதையே அருகில் வா
பாதை நீ காட்டிட
பயணத்தை தொடர வா
போகும் தூரம் அதிகம் தான்
போக போக புது வேகம் தான்
வழியில் எங்கும் தூறல் தான் விடியும் வரை இளமையின் சாரல் தான்
காதல் போதையில்
திண்டாடுது உள்ளம்
காம பார்வையால்
தள்ளாடுது தேகம்
தேவை தான் தீருமா!?
தேடல்கள் தான் தொடருமா!
தாகத்தால் தவிக்கிறேன்.. இளமை
தாக்கத்தால் வேர்க்கிறேன்!!
பூமியில் சொர்க்கம் தான்!
பூவையின் அனைப்பினில் தான்
பூக்களும் வியக்குதே
பூந்தேனினும் உன் இதழ் இனிக்குதே
காதல் போதையில்
திண்டாடுது உள்ளம்
காம பார்வையால்
தள்ளாடுது தேகம்