அவளே அவளா யாரோ தானா
ஏனோ ஏனோ மாறினாளோ
அவளே அவளா யாரோ தானா
ஏனோ ஏனோ மாறினாளோ
என்னை ஏன் அவள் மறந்தாளோ
என்னை நானே கேட்கிறேன்
அவளே அவளா யாரோ தானா
ஏனோ ஏனோ மாறினாளோ
அவளின் நினைவுகளால்
உள்ளில் உணர்வுகளை இழக்குது
இதயம் எழுதிய கவிதைகளை
இதழ்கள் உறக்கப்படிக்குது
நட்பு வந்தது காதல் தந்தது
காதல் வந்தது கனவுகள் தந்தது
கனவுகள் வந்தது இதயம் வளர்த்தது
உறவுகள் வளர்ந்தது உதயங்களை மறந்தது
அவளே அவளா யாரோ தானா
ஏனோ ஏனோ மாறினாளோ
அவளே அவளா யாரோ தானா
ஏனோ ஏனோ மாறினாளோ
இளமை பருவங்கள்
காலங்களை மறக்குது
காதல் மயக்கங்கள்
கண்ணை மறைக்குது
புரிதல் போனது பொறுமை இழந்தது
பிரிவை தந்தது உள்ளம் வலித்தது
போதை வந்தது
நினைவுகள் மறைந்தது
பாதை மறந்தது வந்த பயணம் முடிந்தது
பாதை மறந்தது வந்த பயணம் முடிந்தது
என்னை ஏன் அவள் மறந்தாளோ
என்னை நானே கேட்கிறேன்
அவளே அவளா யாரோ தானா
ஏனோ ஏனோ மாறினாளோ