ஏங்குது ஏங்குது மனசு
காரணம் காரணம் இள வயசு
தூங்காத விழிகள் இங்கு
துக்கம் தீர வழிகள் என்ன கூறு
ஏங்குது ஏங்குது மனசு
காரணம் காரணம் இள வயசு
தூங்காத விழிகள் இங்கு
துக்கம் தீர வழிகள் என்ன கூறு
காதல் என்பது தொடர் நாடகம்
கண்கள் அதில் ஒரு பாத்திரம்
கனவுகள் போடும் சூத்திரம்
காமம் அறியாது சாஸ்திரம்
இன்பங்கள் நடத்தும் ஜாலகம்
காலங்கள் செய்கின்ற பாதகம்
துன்பங்கள் தருகின்ற ஜாதகம்
பெண் மணம் பெரிய நூலகம்
ஏங்குது ஏங்குது மனசு
காரணம் காரணம் இள வயசு
தூங்காத விழிகள் இங்கு
துக்கம் தீர வழிகள் என்ன கூறு
மனது என்றுமே ஓடும் எந்திரம்
மோகங்கள் போடும் மந்திரம்
நெஞ்சம் வைக்கின்ற பந்தயம்
தேகங்கள் செய்கின்ற தந்திரம்
இதயத்தில் தாங்காத சுமைகள்
இளமையில் விழுகின்ற பழிகள்
ஒவ்வொரு நொடியும் வலிகள்
ஒரு தலை காதலால் பலிகள்
ஒரு தலை காதலால் பலிகள்
ஏங்குது ஏங்குது மனசு
காரணம் காரணம் இள வயசு
தூங்காத விழிகள் இங்கு
துக்கம் தீர வழிகள் என்ன கூறு