ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
வானில் தவழும் நிலவே
என்னை தழுவ வருவாயா
விண்ணில் நீந்தும் முகிலே
காதலை கரை சேர்ப்பாயா
வானில் தவழும் நிலவே
என்னை தழுவ வருவாயா
விண்ணில் நீந்தும் முகிலே
காதலை கரை சேர்ப்பாயா
காலை கனவுகள் கை கூடுமா
கண்கள் நீரை வார்க்குமா
கானல் நீர் தாகம் தீர்க்குமா
காதல் பிரிவில் காமம் சேருமா
பகலை இரவாக்கும் மூடிய விழிகள்
மௌனத்தை மொழியாக்கும்
முனகலில் இதழ்கள்
விரல்கள் தழுவிட விரதங்கள் தீருமா
விரும்பி அணைத்திட
சொர்கம் தான் தெரியுமா
வானில் தவழும் நிலவே
என்னை தழுவ வருவாயா
விண்ணில் நீந்தும் முகிலே
காதலை கரை சேர்ப்பாயா
கனவுகள் உறக்கத்தை தொலைத்தது
இரவுகள் உறக்கத்தை தொலைத்தது
உணர்வுகள் தேகத்தை
தொலைத்தது
காலங்கள் இளமையை
தொலைத்தது
பூமியின் வேர்வை மழை நீர் தானே
பூவையின் தேவை உன் அணைப்பில் தானே
இளமையில் நரகம் விரகம் தானே
இவ்வுலகில் இன்பம் உன்னிடம் தானே
இவ்வுலகில் இன்பம் உன்னிடம் தானே
வானில் தவழும் நிலவே
என்னை தழுவ வருவாயா
விண்ணில் நீந்தும் முகிலே
காதலை கரை சேர்ப்பாயா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ