கேட்குதா கேட்குதா
உள்ளம் அழுகின்ற சத்தங்கள்..?
ஏறுதே ஏறுதே தேகத்தில்
காதல் பித்தங்கள்..!
கேட்குதா கேட்குதா
உள்ளம் அழுகின்ற சத்தங்கள்..!?
ஏறுதே ஏறுதே தேகத்தில்
காதல் பித்தங்கள்..!
மறைந்து போனதா நீ
தந்த முத்தங்கள்...
மறைந்து போனதா நீ
தந்த முத்தங்கள்...
மனதில் தினமும்
நடக்கின்ற யுத்தங்கள்...
இதயத்தில் வடியுது
சிந்திய ரத்தங்கள்...
சிந்திய ரத்தங்கள்
மறந்து போனதா
பழகிய மொத்தமும்..
மறந்து போனதா
பழகிய மொத்தமும்
மாறி போனதா
காதலின் அர்த்தங்கள்..
நாடகம் தொடருதே
பகல் இரவு நித்தமும்..
பகல் இரவு நித்தமும்
கேட்குதா கேட்குதா
உள்ளம் அழுகின்ற சத்தங்கள்..!?
ஏறுதே ஏறுதே தேகத்தில்
காதல் பித்தங்கள்..!?
விலகி போன காதலால்
வழி மாறிய உறவுகள்
விலகி போன காதலால்
வழி மாறிய உறவுகள்
வந்து போன சொந்தங்கள்
வதந்தி பரப்பிய பந்தங்கள்
வாழ்க்கை மாறிய அர்த்தங்கள்
வலிகள் தந்த இரவுகள்
வலிகள் தந்த இரவுகள்
நினைவுகள் தேடும் இனிமை
நிஜங்கள் விரும்பும் தனிமை
நினைவுகள் தேடும் இனிமை
நிஜங்கள் விரும்பும் தனிமை
காலங்கள் கூறிடும் உண்மை
காட்சிகள் காட்டும் கொடுமை
கனவுகள் என்றும் புதுமை
கனவுகள் என்றும் புதுமை
கேட்குதா கேட்குதா
உள்ளம் அழுகின்ற சத்தங்கள்..!?
ஏறுதே ஏறுதே தேகத்தில்
காதல் பித்தங்கள்..!?