ஏனிந்த மௌனம் இதயத்தில்
ஏக்கங்களின் ஏளனங்கள்
காணல் நீராய் காதல்..இங்கு
கண்கள் மனதுடன் மோதல்!
ஏனிந்த மௌனம் இதயத்தில்
ஏக்கங்களின் ஏளனங்கள்
காணல் நீராய் காதல்..இங்கு
கண்கள் மனதுடன் மோதல்
காணும் விழிகளோ அறிவதில்லை. அவளை...
கண்டதை மனதோ மறப்பதில்லை..
மறக்க முடியாத
நினைவுகளாக அவள்
மனதில் மறைந்திடாத
நிலவாக அவள்..
ஏனிந்த மௌனம் இதயத்தில்
ஏக்கங்களின் ஏளனங்கள்
காணல் நீராய் காதல்..இங்கு
கண்கள் மனதுடன் மோதல்
கனவு காட்சிகளில்
பிழையாக அவள்..
கடந்து போன
காதல் கதையாக அவள்..
நேரத்தை மறந்திட்ட
உதயம் அன்று..
நேசத்தை மறைத்திட்ட
நெஞ்சம் இன்று..
ஏனிந்த மௌனம் இதயத்தில்
ஏக்கங்களின் ஏளனங்கள்
காணல் நீராய் காதல்..இங்கு
கண்கள் மனதுடன் மோதல்
நேரெதிர் பாதையில்
பயணம் இது....
நெடுநாள் முன்னர்
துவங்கியது இது
தூக்கம் கலைந்த பின்பும்
கணக்குது விழித்திரை
கடைசி வரை தொடருமா
இந்த யாத்திரை.
ஏனிந்த மௌனம் இதயத்தில்
ஏக்கங்களின் ஏளனங்கள்
காணல் நீராய் காதல்..இங்கு
கண்கள் மனதுடன் மோதல்