Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
நின் வதனம் கண்டு வியந்தேன்
கண்ணம்மா
நிலவென உள்ளில் மகிழ்ந்தேனடி
கண்ணம்மா
நின் வதனம் கண்டு வியந்தேன்
கண்ணம்மா
நிலவென உள்ளில் மகிழ்ந்தேனடி
கண்ணம்மா
சந்தங்கள் இல்லாமலே இதழ்கள்
கீதம் இசைக்குதடி கண்ணம்மா
நயணங்கள் ஒளிருதடி
கண்ணம்மா
விளக்கும் ஒளிர மறக்குதடி
கண்ணம்மா
சதங்கை சிதறியதாய் உன்
சிரிப்பொலி சங்கீதம் பாடுதடி
கண்ணம்மா
சயனம் மறந்தேனடி
கண்ணம்மா
ஸ்வரங்கள் பிறந்ததடி
கண்ணம்மா
நளினம் தெரிந்ததடி உன்னில்
நாணம் கூடுதடி கண்ணம்மா
சலனங்கள் மனதிலடி கண்ணம்மா
சந்தோஷம் ஆனதடி கண்ணம்மா
நின் வதனம் கண்டு வியந்தேன்
கண்ணம்மா
நிலவென உள்ளில் மகிழ்ந்தேனடி
கண்ணம்மா
மெய்ப்பொருள் தேடியே
கண்ணம்மா
உன் மெய்யில் பொருள் கண்டேனடி
கண்ணம்மா
நின் பதம் சரணடைந்தேன்
கண்ணம்மா
என்னையே நான் இழந்தேனடி
கண்ணம்மா
ரதி உன்னை பார்க்கையிலே
கண்ணம்மா
பாரதி கவி போல் ஆனேனடி
கண்ணம்மா
பாரதி கவி போல் ஆனேனடி
கண்ணம்மா
நின் வதனம் கண்டு வியந்தேன்
கண்ணம்மா
நிலவென உள்ளில் மகிழ்ந்தேனடி
கண்ணம்மா
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah