என்னை என்னை
ஏன் மாற்றினாய் இன்று
ஏனோ ஏனோ என்னை
ஏமாற்றினாய்
இதழ்கள் பேசியது கொஞ்சம்
விழிகள் பேசிட கெஞ்சும்
வழி முழுதும் கொஞ்சும் தந்த
வலிகளால் மனது அஞ்சும்
வலிகளால் மனது அஞ்சும்
விண்ணோடு பறந்த காதல்
மண்ணோடு மறைந்து போனது
ஏய்த வில்லையே அம்பு
ஏனோ குறி வைத்து தாக்குது
சொன்னால் தான் தெரியும் கண்ணே
சொல்லாலே என்னை
ஏன் கொல்கிறாய்
பரிவு காட்ட வருவாயா
பிரிவை ஏன் தீர்வாக தருகிறாய்
புரியாத புதிராக காதல்
தெரியாமல் மனதில் மோதல்
என்னை என்னை
ஏன் மாற்றினாய் இன்று
ஏனோ ஏனோ என்னை
ஏமாற்றினாய்
ஏனோ ஏனோ என்னை
ஏமாற்றினாய்
ஏமாற்றினாய்