வானம் வரைந்த வண்ண
ஓவியமே நந்தலாலா
விண்ணில் மிதக்கும் வெள்ளி
கிண்ணமே நந்தலாலா
வானம் வரைந்த வண்ண
ஓவியமே நந்தலாலா
விண்ணில் மிதக்கும் வெள்ளி
கிண்ணமே நந்தலாலா
காரிருளில் உன்னை
ரசித்தேன் நந்தலாலா
கனவுக்குள் உனை
வளர்த்தேன் நந்தலாலா
கண்ணுக்குள்
விழியானாய் நந்தலாலா
கவிதைக்கு
மொழியானாய் நந்தலாலா
வானம் வரைந்த வண்ண
ஓவியமே நந்தலாலா
விண்ணில் மிதக்கும் வெள்ளி
கிண்ணமே நந்தலாலா
காதலுக்கு
உயிரானாய் நந்தலாலா
மழலைக்கு
உணவானாய் நந்தலாலா
கருநிற வான் முகத்தில்
திலகமானாய் நந்தலாலா
இரவல் ஒளியில்
இன்பம் தந்தாய் நந்தலாலா
வானம் வரைந்த வண்ண
ஓவியமே நந்தலாலா
விண்ணில் மிதக்கும் வெள்ளி
கிண்ணமே நந்தலாலா
வாழ்க்கையில்
வழியானாய் நந்தலாலா
பூமிக்கு
விளக்கானாய் நந்தலாலா
நம்பிக்கைக்கு
வளர்பிறையாய் நந்தலாலா
நம்பினோர்க்கு
இறையானாய் நந்தலாலா
வானம் வரைந்த வண்ண
ஓவியமே நந்தலாலா
விண்ணில் மிதக்கும் வெள்ளி
கிண்ணமே நந்தலாலா
நந்தலாலா நந்தலாலா
இப்பூவுலகமே சொர்கம் நீ
வந்ததாலா வந்ததாலா
நந்தலாலா நீ வந்ததாலா