(love kills skills
Love causes More than cancer
Love is injurious to health
Love is also injurious to wealth) - audio
காதலே முதல் கலை
காமமே அதன் கிளை
கண்கள் விரிக்குது வலை
காலம் செய்கின்ற பிழை
காதலே முதல் கலை
காமமே அதன் கிளை
கண்கள் விரிக்குது வலை
காலம் செய்கின்ற பிழை
குளிர்கின்ற பருவ நிலை
குளிக்கின்ற உருவ சிலை
மோகமே காய்கின்ற இலை
தேகமோ கொதிகின்ற உலை
அன்பே காதலின் தலை
அழகு செய்திடும் கொலை
மனதிலே அடிக்குது பேரலை
வெட்கத்தை முதலில் களை
காதலே முதல் கலை
காமமே அதன் கிளை
கண்கள் விரிக்குது வலை
காலம் செய்கின்ற பிழை
இன்பங்கள் ஓடிடும் நீரலை
இளமை காட்டிடும் நேரலை
நெஞ்சுக்குள் பெய்யும் மாமழை
நேரங்கள் கேட்கும் பெரும் விலை
கோபங்கள் காட்டும் ஏரிமலை
போகட்டும் விட்டு தொலை
பிரிவுகள் என்பது படுகொலை
தேகம் பெற்றிடும் விடுதலை
காதலே முதல் கலை
காமமே அதன் கிளை
கண்கள் விரிக்குது வலை
காலம் செய்கின்ற பிழை