நட்பின் புதிய முகவரி
ஒற்றுமையே முதல் வரி
நண்பர்கள் கூறும் அறிவுரை
வாழ்க்கையின் முன்னுரை
நட்பின் புதிய முகவரி
ஒற்றுமையே முதல் வரி
நண்பர்கள் கூறும் அறிவுரை
Vaazhkkaiyin முன்னுரை
அன்பு எழுதிடும் முகவுரை
உள்ளம் கூறிடும் பல முறை
நம்பிக்கையில் வரும்
தலைமுறை
உண்மைக்கு கிடையாது வரைமுறை
வாழ்க்கை சொல்லும் ரகசியம்
வாழ்ந்து பார் அவசியம்
விளங்கிடும் புது தத்துவம்
எழுதலாம் பல புத்தகம்
நட்பின் புதிய முகவரி
ஒற்றுமையே முதல் வரி
நண்பர்கள் கூறும் அறிவுரை
வாழ்க்கையின் முன்னுரை
கலக்கங்கள் தயக்கங்கள்
காலம் கடந்தால் மறந்திடும்
பிரிவுகள் தனிமைகள் நாம்
ஒன்றாக மறைந்திடும்
நேற்று முடிந்து போன சங்கதி
நாளை தெரியாத நம் விதி
இன்று வேண்டும் நிம்மதி
அன்பை என்றும் கடைபிடி
நண்பர்கள் கூறும் அறிவுரை
வாழ்க்கையின் முன்னுரை
நட்பின் புதிய முகவரி
ஒற்றுமையே முதல் வரி
நண்பர்கள் கூறும் அறிவுரை
வாழ்க்கையின் முன்னுரை