லா லால லால லா ல லால லல
லா லால லால லா ல லால லல
என் விழிகளை கண்டு வானம்
தினம் விடியலை மறக்கிறதே
என் விழிகளை கண்டு வானம்
தினம் விடியலை மறக்கிறதே
நிலவும் என் முகம் கண்டு
புரியாமல் குழம்பி தவிக்கிறதே
நிலவும் என் முகம் கண்டு
புரியாமல் குழம்பி தவிக்கிறதே
என் விழிகளை கண்டு வானம்
தினம் விடியலை மறக்கிறதே
நிலவும் என் முகம் கண்டு
புரியாமல் குழம்பி தவிக்கிறதே
ஒற்றை ரோஜா நான் சூட
மூர்ச்சையாகி போனதே
தேன் எடுக்க பட்டாம்பூச்சிகள்
என் கன்னத்தை தேடி அலைகிறதே
தேன் எடுக்க பட்டாம்பூச்சிகள்
என் கன்னத்தை தேடி அலைகிறதே
பச்சை கிளிகள் என் குரல் கேட்டு
இச்சை கொண்டு துணை தேடுதே
துள்ளி ஓடும் என் அழகை கண்டு
புள்ளிமான்கள் ஓட்டம் மறந்து போனதே
துள்ளி ஓடும் என் அழகை கண்டு
புள்ளிமான்கள் ஓட்டம் மறந்து போனதே
லா லால லால லா ல லால லல
லா லால லால லா ல லால லல
என் விழிகளை கண்டு வானம்
தினம் விடியலை மறக்கிறதே
நிலவும் என் முகம் கண்டு
புரியாமல் குழம்பி தவிக்கிறதே
வானவில்லும் என் நிறம் கண்டு
வழியில் புலம்பி திரிகிறதே
கார்முகில்கள் என் கூந்தல் கண்டு
ஆனந்த கண்ணீர் விடுகிறதே
கார்முகில்கள் என் கூந்தல் கண்டு
ஆனந்த கண்ணீர் விடுகிறதே
மழைத்துளிகள் என் மீது
பட்டு மயங்கி கிடக்கிறதே
புதுதுணிகள் என் மேனியை
சூழ்ந்து போதையில் மிதக்கிறதே
புதுதுணிகள் என் மேனியை
சூழ்ந்து போதையில் மிதக்கிறதே
லா லால லால லா ல லால லல
லா லால லால லா ல லால லல
என் விழிகளை கண்டு வானம்
தினம் விடியலை மறக்கிறதே
நிலவும் என் முகம் கண்டு
புரியாமல் குழம்பி தவிக்கிறதே
லா லால லால லா ல லால லல
லா லால லால லா ல லால லல