கண்கள் நடத்தும் நாடகம்
காதலன் என்கிற பாத்திரம்
கனவிலே நடந்திட்ட சுயம்வரம்
கடவுள் மறுத்திட்ட ஓர் வரம்
கண்கள் நடத்தும் நாடகம்
காதலன் என்கிற பாத்திரம்
கனவிலே நடந்திட்ட சுயம்வரம்
கடவுள் மறுத்திட்ட ஓர் வரம்
விதிகள் செய்த பெரும் கலவரம்
விழிகளில் என்றுமே நீர்க்குளம்
மனதுக்குள் தொடங்கிய போர்க்களம்
மயக்கம் தான் என்ற நிலை வரும்
பொய்கள் செய்திடும் அமர்க்களம்
மெய்கள் உறங்கிடும் கதைக்களம்
உணர்வுகள் தேடுது அடைக்கலம்
உறவுகளில் புரிதல் அவசியம்
உள்ளத்தில் தோன்றும் பயங்கரம்
உறங்கிட கூட பயம் வரும்
தேகத்தில் நோய்களின் தீவிரம்
மரணம் மட்டுமே தீர்வு தரும்
கண்கள் நடத்தும் நாடகம்
காதலன் என்கிற பாத்திரம்
கனவிலே நடந்திட்ட சுயம்வரம்
கடவுள் மறுத்திட்ட ஓர் வரம்