சொல்லாமல் சொல்லிடும் விழிகள்
சொல்லாலே கொல்லும் மொழிகள்
கேட்காமலே விழுகின்ற பழிகள்
பிரிவை ஏற்படுத்த உன் வழிகள்
சொல்லாமல் சொல்லிடும் விழிகள்
சொல்லாலே கொல்லும் மொழிகள்
கேட்காமலே விழுகின்ற பழிகள்
பிரிவை ஏற்படுத்த உன் வழிகள்
வயதிற்கு மீறிய நேசங்கள்
வாழ்க்கைக்கு உதவா பாசங்கள்
மனதினில் மறைத்திட்ட விஷயங்கள்
மனிதருக்கு எத்தனை வேஷங்கள்
தனியாக நடத்தும் ஊடகம். .நீ
துணையாக வந்திட பாதகம் என்
கைகளில் உந்தன் ஜாதகம்
பொய்களே உந்தன் வாசகம்
சொல்லாமல் சொல்லிடும் விழிகள்
சொல்லாலே கொல்லும் மொழிகள்
கேட்காமலே விழுகின்ற பழிகள்
பிரிவை ஏற்படுத்த உன் வழிகள்
உன்னில் தெரியும் மாற்றங்கள்
என்னுள் தருகின்ற ஏமாற்றங்கள்
உன்னால் நடக்கும் நாடகம்
தன்னாலே தெரியும் நாள் வரும்
நட்பை ரசித்த காலங்கள் உன்
நடிப்பால் வீணடித்த நேரங்கள்
மனதினில் சுமக்கின்ற பாரங்கள்
மரணம் வரையில் தீராத பாவங்கள்
சொல்லாமல் சொல்லிடும் விழிகள்
சொல்லாலே கொல்லும் மொழிகள்
கேட்காமலே விழுகின்ற பழிகள்
பிரிவை ஏற்படுத்த உன் வழிகள்
நட்பை ரசித்த காலங்கள் உன்
நடிப்பால் வீணடித்த நேரங்கள்
மனதினில் சுமக்கின்ற பாரங்கள்
மரணம் வரையில் தீராத பாவங்கள்
மரணம் வரையில் தீராத பாவங்கள்