காவியங்களில் இல்லாத காதல்
கதைகளில் சொல்லாத காதல்
காவியங்களில் இல்லாத காதல்
கதைகளில் சொல்லாத காதல்
கவிதைகளில் நில்லாத காதல்
கனவுகளில் தெரியாத காதல்
கருத்துகளில் விளங்காத காதல்
கண்களில் படாத காதல்
காமத்தில் முடியாத காதல்
கை சேரும்வரை புரியாத காதல்
காவியங்களில் இல்லாத காதல்
கதைகளில் சொல்லாத காதல்
வாசிக்க அல்ல காதல்
வா வாழ்ந்து பார்ப்போம்
கடைசி சுவாசம் வரை காதல்