இதயம் எழுதிய வரிகள்
இதழ்கள் பேசிடும் மொழிகள்
விழிகள் கேட்கின்ற கேள்விகள்
இமைகள் கூறிடும் விடைகள்
இதயம் எழுதிய வரிகள்
இதழ்கள் பேசிடும் மொழிகள்
விழிகள் கேட்கின்ற கேள்விகள்
இமைகள் கூறிடும் பதில்கள்
கனவுக்குள் அவளின் காட்சிகள்
கவிதைக்கு அதுவே சாட்சிகள்
மனது செய்திடும் சூழ்ச்சிகள்
மறக்க முடியாத வீழ்ச்சிகள்
உள்ளத்தில் பெய்திடும் மாமழை
உடலில் மோதிடும் பேரலை
காதலில் நடந்திட்ட சிறு பிழை
கடைசி வரை தீராத பெரும் பகை
இதயம் எழுதிய வரிகள்
இதழ்கள் பேசிடும் மொழிகள்
விழிகள் கேட்கின்ற கேள்விகள்
இமைகள் கூறிடும் பதில்கள்
காலங்கள் நடத்தும் யாகங்கள்
நேரங்கள் கூறிடும் வேதங்கள்
வாழ்க்கை போதித்த பாடங்கள்
வாழ்வினை பாதித்த வேடங்கள்
தோழி சொல்லிய வார்த்தைகள்
தோல்விக்கு கிடைத்த வாழ்த்துக்கள்
தலையில் கானும் கிறுக்கல்கள்
முடிவுரை எழுதிய சறுக்கல்கள்
இறைவனின்
ஒரு தலையான தீர்ப்புகள்
இறைவனின்
ஒரு தலையான தீர்ப்புகள்
இதயம் எழுதிய வரிகள்
இதழ்கள் பேசிடும் மொழிகள்
விழிகள் கேட்கின்ற கேள்விகள்
இமைகள் கூறிடும் விடைகள்