வாயு புத்ரா! வாணர தலைவா!
வணங்குகிறோம்! உனை நாங்கள்!
வாழ்வில் வரும் துன்பத்தை நீக்கி
வளங்களை தந்திடுவாய் நீயே!
வாயு புத்ரா! வாணர தலைவா!
வணங்குகிறோம்! உனை நாங்கள்!
வாழ்வில் வரும் துன்பத்தை நீக்கி
வளங்களை தந்திடுவாய் நீயே!
பில்லி சூனியம் ஏவல்கள்..
பேய் பிசாசு பூதங்கள்..
கணவில் தோன்றும் மாயைகள்- உன்
கதயால் அகற்றி காத்திடுவாய்!
வாயு புத்ரா! வாணர தலைவா!
வணங்குகிறோம்! உனை நாங்கள்!
வாழ்வில் வரும் துன்பத்தை நீக்கி
வளங்களை தந்திடுவாய் நீயே!
பட்டிணி பசியும் பஞ்சத்துடன்..
பிணியால் வாடும் தேகத்தில்
சனியால் வரும் சங்கடங்கள்....
சகலமும் நீக்கி அருள் புரிவாய்!
வாயு புத்ரா! வாணர தலைவா!
வணங்குகிறோம்! உனை நாங்கள்!
வாழ்வில் வரும் துன்பத்தை நீக்கி
வளங்களை தந்திடுவாய் நீயே!
புயலும் இடியுடன் நிலநடுக்கமும்
பெருந்துயர் தருகின்ற சுணாமியும்
தீக்கணலை கக்கும் எரிமலையும்
தீண்டாமல் இருக்க செய்திடுவாய்!
வாயு புத்ரா! வாணர தலைவா!
வணங்குகிறோம்! உனை நாங்கள்!
வாழ்வில் வரும் துன்பத்தை நீக்கி
வளங்களை தந்திடுவாய் நீயே