இனிய மாலை நிலவே
நிலவில் என் கனவே
நினைவுகள் புது விதம்
தொடர்வதில் சுகம் சுகம்
இனிய மாலை நிலவே
நிலவில் என் கனவே
நினைவுகள் புது விதம்
தொடர்வதில் சுகம் சுகம்
வெண்பணி சாரல் மழையே
குளிர்கின்ற காற்றின் அலையே
விழுகின்ற காலை நிழலே
முடிகின்ற இரவுப்பொழுதே
மனதில் தோன்றும் நினைவுகள்
கனவுகள் பின்னும் வலைகள்
நெஞ்சில் மறைத்திட்ட ஆசைகள்
நேசத்திற்கு இல்லை பாஷைகள்
இனிய மாலை நிலவே
நிலவில் என் கனவே
நினைவுகள் புது விதம்
தொடர்வதில் சுகம் சுகம்
பிறை நிலவு நீலவானில்
உலா போகின்ற வெண்மேகம்
குறை இல்லா என் மனதில்
தள்ளாடிடும் இளமை மோகம்
அதிகாலை நேரங்களே
கதிர் பாடும் பூபாள ராகங்களே
வானில் தோன்றும் வண்ணங்களே
என்னுள்ளில் மறையும் எண்ணங்களே
விழிகளில் தோன்றும் கனவுகளே
காதல் கை கூடும் நினைவுகளே
விளங்காத என் ஆசைகளே
விலகிடாத என் அன்பே
இனிய மாலை நிலவே
நிலவில் என் கனவே
நினைவுகள் புது விதம்
தொடர்வதில் சுகம் சுகம்
இனிய மாலை நிலவே
நிலவில் என் கனவே