ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஆரிராரோ ஆரிராரோ
ஆராரி ராராரி ஆரிராரோ
ஆராரி ஆராரி ஆரிராரோ
நட்சத்திர பூக்கள்
நட்சத்திர பூக்கள்
வானிலே பூத்ததே
வெண்ணிலவு
வெண்ணிலவு எனது
வயிற்றிலே உதித்ததே
நட்சத்திர பூக்கள்
வானிலே பூத்ததே
வெண்ணிலவு எனது
வயிற்றிலே உதித்ததே
தாலாட்ட தாயும் நான் உண்டு
சீராட்ட தந்தை உண்டு
கதை பாட்டுகள் சொல்ல
தாத்தா பாட்டி இருவரும் உண்டு
உன் கண்கள் என்னை தேடுதே
உன் மழலை மொழி கேட்டு
நெஞ்சம் மகிழுதே
பிஞ்சு விரல்கள் தொடும் போது
மனதில் இன்பம் பெருகுதே
நட்சத்திர பூக்கள்
வானிலே பூத்ததே
வெண்ணிலவு எனது
வயிற்றிலே உதித்ததே
கொஞ்சி விளையாட
தாய் மாமனும் உண்டு
கூழ் செய்து ஊட்ட
அத்தையும் உண்டு
அத்தனை சொந்தமும்
உன்னை பாடுது இங்கு
உந்தன் சிரிப்பிலே
கவலைகள் போனதே
உன் அழுகை ஒலி
எந்தன் உள்ளில் கலங்க வைக்குதே
பஞ்சு பாதம் நடக்கையில்
கொழுசு சத்தம் புது
ஸ்வரங்கள் இசைக்குதே
நட்சத்திர பூக்கள்
வானிலே பூத்ததே
வெண்ணிலவு எங்கள்
வீட்டிலே தவழுதே
ஆராரி ராராரி ஆரிராரோ
ஆராரி ஆராரி ஆரிராரோ
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்