மாமன் தந்த மல்லிக பூவு
மாசக் கணக்கா மணத்து கிடக்கு
மனசு இப்போ நிறஞ்சு போச்சு
கனவெல்லாம் நிஜமா ஆச்சு
மாமன் தந்த மல்லிக பூவு
மாசக் கணக்கா மணத்து கிடக்கு
மனசு இப்போ நிறஞ்சு போச்சு
கனவெல்லாம் நிஜமா ஆச்சு
தொடக் கறி எடுத்து சமச்சு
துவயல சேத்து அரச்சு
அடுப்படியில நான் கொடுக்க
அப்படியே அவன் ருசிக்க
நல்லி எழும்ப நான் கடிக்க
நாவால அவன் புடுங்க
நாளும் பொழுதும் ஓடிடுச்சு
நினைப்புல தங்கிடுச்சு
சுடு தண்ணி விளாவி வச்சு
சீகக்கா குழச்சு வச்சு
மஞ்ச தேச்சு நான் குளிக்க
மாமன் காரன் மறஞ்சு ரசிக்க
மாமன் தந்த மல்லிக பூவு
மாசக் கணக்கா மணத்து கிடக்கு
மனசு இப்போ நிறஞ்சு போச்சு
கனவெல்லாம் நிஜமா ஆச்சு
எட்டு முழ வேட்டி கட்டி
நாலு எட்டு நடக்கயில-
தேரு போல இருக்குமே
ஊரே நின்னு பாக்குமே
திருவிழா நடந்ததும்
தெருக்கூத்து பாத்ததும்
தெருவெல்லாம் திரிந்ததும்
திருஷ்டி சுத்தி போட்டதும்
ஊத காத்து அடிச்சதும்
ஊரு ஓரம் ஒதுங்கினதும்
நடு சாமம் மறந்ததும்
கால நேரம் போனது
மாமன் தந்த மல்லிக பூவு
மாசக் கணக்கா மணத்து கிடக்கு
மனசு இப்போ நிறஞ்சு போச்சு
கனவெல்லாம் நிஜமா ஆச்சு