கடவுள் நடத்திடும் நாடகம்
மனிதன் என்கிற பாத்திரம்
காலங்கள் ஓடிடும் அவசரம்
கடமைகள் செய்திடல் அவசியம்
கடவுள் நடத்தும் நாடகம்
மனிதன் என்கிற பாத்திரம்
காலங்கள் ஓடிடும் அவசரம்
கடமைகள் செய்திடல் அவசியம்
சுற்றம் என்றால் பயம் வரும்
முற்றும் மறந்த நிலை வரும்
கோலங்கள் மாறிடும் அதிசயம்
பெற்றது போய் விடும் நிதர்சனம்
பொய்கள் செய்திடும் அமர்க்களம்
மெய்கள் உறங்கிடும் கதைக்களம்
உணர்வுகள் தேடுது அடைக்கலம்
உறவுகளில் புரிதல் அவசியம்
கடவுள் நடத்தும் நாடகம்
மனிதன் என்கிற பாத்திரம்
காலங்கள் ஓடிடும் அவசரம்
கடமைகள் செய்திடல் அவசியம்
உள்ளத்தில் தோன்றும் பயங்கரம்
உறங்கிட கூட பயம் வரும்
மேனியில் நோய்களின் தீவிரம்
மயக்கம் தான் நிலவரம்
விதிகள் செய்கின்ற கலவரம்
விழிகளில் என்றுமே நீர்க்குளம்
மனதுக்குள் தொடங்கிய போர்க்களம்
மரணம் வரை தொடர்ந்திடும்
மரணம் வரை தொடர்ந்திடும்
கடவுள் நடத்திடும் நாடகம்
மனிதன் என்கிற பாத்திரம்
கோலங்கள் மாறிடும் அதிசயம்
காலங்கள் ஓடிடும் அவசரம்