ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
புரியாத புதிரானதாஆஆ இந்த வாழ்க்கை
புரிவதற்குள் முடிந்து விடுமா வாழும்ம்ம் காலம்
புரியாத புதிரானதா வாழ்க்கை
புரிவதற்குள் முடியுமா காலம்
அன்பே அறியாத உனது மனது
அழுதே பழகிய என் கண்கள்
யார் நான் என அறிய முடியவில்லை
நாளை உண்டா என்ற
சேதி தெரியவில்லை
வாழ்க்கையின் மீதிக்கு
விடைகள் கிடைக்கவில்லை
பாதைகள் எதுவும்
இதுவரை தென்படவில்லை
மேனியில் குருதி
உறைகின்ற வரையில்
கேளிகள் செய்து
வதைத்திடும் உலகம்
அவரவர் செய்த
பிழைகள் மறந்திடும்
அடுத்தவர் பிழைகளை பெரிதாக்கிடும்
புரியாத புதிரானதா வாழ்க்கை
புரிவதற்குள் முடியுமா காலம்
அன்பே அறியாத உன் மனது
அழுதே பழகிய என் கண்கள்
கண்ணில் தெரிகின்ற கொடிய விஷம்
பேசும் மொழிகளில் முழுவதும் விஷமம்
உள்ளம் போடுகின்ற பொய் வேஷம்
முகம் அதனை மறைத்திடும் மாயாஜாலம்
மண்ணில் விழும் மழைத்துளிகள்
எல்லாம் கடல் சேருமா என யார் அறிவார்
கனவுகளோடு வாழும் மனித மனம்
என்று நிறைவேறும் யார் கண்டார்
மலைதனில் பிறக்குது நீர் அருவி
கடல் சென்று சேர்வது இயற்கை விதி
யாருக்கு யார் என இறைவன்
எழுதிய முடிவு
முடிவுகள் தெரியாமல் இல்லை
மனதில் விடிவு
புரியாத புதிரானதா வாழ்க்கை
புரிவதற்குள் முடியுமா காலம்
அன்பே அறியாத உன் மனது
அழுதே பழகிய என் கண்கள்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்