அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
பாடுவோம்
அல்லும் பகலும் கர்த்தரை
நாம் துதிப்போம்
மண்ணில் வந்து அவதரித்தார்
மனங்களை எல்லாம் அபகரித்தார்
நம் பாவங்களை அவர் சுமந்தார் - நல்பாதையை நமக்களித்தார்
மண்ணில் வந்து அவதரித்தார்
மனங்களை எல்லாம் அபகரித்தார்
நம் பாவங்களை அவர் சுமந்தார் - நல்பாதையை நமக்களித்தார்
தீயதை எல்லாம் அவர் அழித்தார்
தீமைகள் யாவும் அவர் ஒழித்தார்
தயையும் உதவவும் போதித்தார்
தாய் போல் நம்மை நேசித்தார்
அன்பே நான் என அவர் உரைத்தார்
ஆட்டிடையனாக அருள் பாலித்தார்
அகந்தை யாவையும் அகற்றியே
அல்லேலூயா என கூற வைத்தார்
மண்ணில் வந்து அவதரித்தார்
மனங்களை எல்லாம் அபகரித்தார்
நம் பாவங்களை அவர் சுமந்தார் - நல்பாதையை நமக்களித்தார்
சிலுவை அவரே சுமந்து வந்தார்-நம்
சிரமங்கள் எல்லாம் அவர் களைந்தார்
பல ரணங்கள் உடலில் ஏற்று கொண்டார்
மரித்த மூன்றாம் நாள் மறுபடி பிறந்து வந்தார்
கர்த்தரை தினமும் துதித்திடுவோம்
நித்திரையிலும் அவரை நினைத்திடுவோம்
வாழ்க்கை முழுவதும்
வணங்கிடுவோம்
தலைமுறை வாழ வழிபடுவோம்
மண்ணில் வந்து அவதரித்தார்
மனங்களை எல்லாம் அபகரித்தார்
நம் பாவங்களை அவர் சுமந்தார் - நல்பாதையை நமக்களித்தார்
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்
அல்லும் பகலும் கர்த்தரை
நாம் துதிப்போம்