ஹ்ம்ம் ஹ்ம்ஹ்ம் ஹ்மஹ்ம்ஹ்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ஹ்ம் ஹ்மஹ்ம்ஹ்ம்
லாலால லாலால லா
வெண்ணிலவு பெண்ணாக
மண்ணுலகு வந்ததோ
நீள் விழிகள் மீன்களாக
நீந்திடும் முக அழகோ
வெண்ணிலவு பெண்ணாக
மண்ணுலகு வந்ததோ
நீள் விழிகள் மீன்களாக
நீந்திடும் முக அழகோ
கூவும் குயிலின் ஓசையினும்
இனிமையான குரலோ
ஆடும் மயில் தோகையினும்
அழகான கார் குழலோ
வண்ண வானவில் போல
வளைந்து நிற்கும் புருவம்
அறுவடைக்கு காத்திருக்கும்
கதிராக இளம் பருவம்
வெண்ணிலவு பெண்ணாக
மண்ணுலகு வந்ததோ
நீள் விழிகள் மீன்களாக
நீந்திடும் முக அழகோ
அந்தி சாயும் வானமாய்
மின்னிடும் மேனி நிறமோ
மது நிறைந்த கிண்ணமாக
குழி விழுந்த கன்னங்கள்
பஞ்சினும் மிருதுவான
பிஞ்சு கை விரல்கள்
அனைத்திட தவிக்குது அவளின்
வளையலணிந்த கரங்கள்
வெண்ணிலவு பெண்ணாக
மண்ணுலகு வந்ததோ
நீள் விழிகள் மீன்களாக
நீந்திடும் முக அழகோ
வண்டுகள் தேன் உண்ண
வட்டமிடும் அவள் இதழ்கள்
முக்கணியினும் சுவையாக
இக்கன்னியின் இரு கனிகள்
வாழை தண்டினும் மேலாக
வளவளப்பாக அவள் கால்கள்
சுற்றிலும் சுகங்கள் தரும்
சிற்றின்ப இடை வெளிகள்
வெண்ணிலவு பெண்ணாக
மண்ணுலகு வந்ததோ
நீள் விழிகள் மீன்களாக
நீந்திடும் முக அழகோ
ஹ்ம்ம் ஹ்ம்ஹ்ம் ஹ்மஹ்ம்ஹ்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ஹ்ம் ஹ்மஹ்ம்ஹ்ம்
லாலால லாலால லா