போதையில் மாறிடும் விழிகள்
பாதை தடுமாறும் வழிகள்
பேதை கூறிய மொழிகள்
பிரிவை ஏற்படுத்தும் பழிகள்
போதையில் மாறிடும் விழிகள்
பாதை தடுமாறும் வழிகள்
பேதை கூறிய மொழிகள்
பிரிவை ஏற்படுத்தும் பழிகள்
காலங்கள் நடத்தும் யாத்திரை
இமைக்க மறுக்கும் விழித்திரை
காத்திருக்க மறக்கும் நித்திரை
காதல் மட்டுமே மாத்திரை
ஆசைகள் போடும் வேஷங்கள்
பாஷைகள் தெரியாமல் பாசங்கள்
ஓசைகள் இல்லாத கோஷங்கள்
தனிமைக்கு கிடைக்காது மோட்சங்கள்
போதையில் மாறிடும் விழிகள்
பாதை தடுமாறும் வழிகள்
பேதை கூறிய மொழிகள்
பிரிவை ஏற்படுத்தும் பழிகள்
இனிமை தருகின்ற முத்தங்கள்
இதயம் போடுகின்ற சத்தங்கள்
இரவுகள் தோறும் யுத்தங்கள்
இளமை எழுதிய பக்கங்கள்
நினைவுகள் அவளுடன் பயணம்
நிழல்கள் அவள் மீது சயனம்
நிஜங்கள் என்றும் லயனம்
நின்றதால் தேடுது மரணம்
போதையில் மாறிடும் விழிகள்
பாதை தடுமாறும் வழிகள்
பேதை கூறிய மொழிகள்
பிரிவை ஏற்படுத்தும் பழிகள்