நினைவுகள் அவள் நினைவுகள்
நெஞ்சம் மறந்திட கூடுமோ
கனவுகள் என் கனவுகள்
கண்களில் மறைந்திட கூடுமோ
நினைவுகள் அவள் நினைவுகள்
நெஞ்சம் மறந்திட கூடுமோ
கனவுகள் என் கனவுகள்
கண்களில் மறைந்திட கூடுமோ
பழகிய நாட்களில் இனிமை
பயணம் சென்றிட புதுமை
முதல் முத்தத்தின் மகிமை
மொத்தத்தில் மகிழ்ந்த இளமை
காதலில் பிரிவுகள் அவஸ்தை
கடைசி வரை தரும் வேதனை
கண்கள் செய்த தவறுகள்
மனதில் என்றும் தனிமை
விதிகள் செய்த கலவரம்
விழிகளில் நீர்க்குளம்
உள்ளில் ஒரு போர்க்களம்
சோகங்களின் அடைக்கலம்
நினைவுகள் அவள் நினைவுகள்
நெஞ்சம் மறந்திட கூடுமோ
கனவுகள் என் கனவுகள்
கண்களில் மறைந்திட கூடுமோ
பாதை மாறிய அவளின் பயணம்
போதையில் மிதக்கும் என் தேகம்
உள்ளம் மறந்த மோகம்
உயிர் உள்ள வரை தங்கிடும்
மரணம் வரை தொடர்ந்திடும்
நினைவுகள் அவள் நினைவுகள்
நெஞ்சம் மறந்திட கூடுமோ
கனவுகள் என் கனவுகள்
கண்களில் மறைந்திட கூடுமோ
கனவுகள் என் கனவுகள்
கண்ணீரில் கரைந்திட கூடுமோ